உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பின் நிர்வாக ரீதியிலும், ட்விட்டரில் பல்வேறு வசதிகளிலும் மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது ட்விட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ட்விட்டரில் எந்த பதிவுகளையும் காண முடியவில்லை எனவும், எர்ரர் மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எலான் மஸ்க் twitter நிறுவனத்தை கைப்பற்றிய பின் மூன்றாவது முறையாக இது போல் ட்விட்டர் முடங்கியதாக கூறப்படுகிறது.