Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள்…. நேரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர்  பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்  குறித்து ஆய்வு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ரகுநாதன், அலுவலர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திருமங்கலக்கோட்டை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் அமைக்கும் சாலை பணி, பெரியகுமுளை -வேதவிஜயாபுரம் சாலை பணி, வடச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பு, கழிவறை வசதி குறித்து ஆய்வு செய்துள்ளார். அதேபோல் வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் குறித்த பதிவேடு, தொற்று நோயாளிகளுக்கான அறை, பிரசவ அறை, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், தடுப்பூசி போடும் இடம், மருந்து கிடங்கு போன்றவற்றை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |