Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு வழக்குகள்… 6 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… ஆட்சியர் அதிரடி..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொண்ட ஆறு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தெள்ளார் பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த அசோக சக்கரவர்த்தி (56) என்ற நபரை சென்ற மே மாதம் 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதுபற்றி தெள்ளார் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசியை சேர்ந்த திருநாவுக்கரசு (38), சாய்பாபா (33), முருகன் (33), கவியரசு (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் சமுத்திரம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் (47) மற்றும் அவரின் மனைவி மங்கை (38) இருவர் மீதும் பலமுறை வழக்குப்பதிந்தும்  தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

அவர்கள் ஆறு பெயரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் உடனடியாக கைது  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 79 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Categories

Tech |