Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல் சீரமைப்புக்கான அறுவை சிகிச்சை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி வடக்கியூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெசிந்தா மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராகுல்லண்ட் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல்லண்ட் பல் சீரமைப்புக்கான அறுவை சிகிச்சை செய்து கிளிக் மாட்டியுள்ளார். இதனால் பல் வலிப்பதாக கூறி சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு பல் வலி அதிகமாக இருந்ததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன் மனைவி இருவரும் தங்களது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |