கேரளாவில் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அவினாஷ் மற்றும் தீபிகா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் தன் குழந்தைக்கு அவினாஷ் முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார். அதனைப் பார்த்த தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என்று கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவினாஷ் தனது மனைவியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த தீபிகா உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதை எடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.