பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம்.
பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான காரணத்தை ஆராய்ந்து குணப்படுத்தும் தன்மை கொண்டு இருக்காது. ஆனால் பல் வலியின் தீவிரத்தைக் குறைக்க செய்யும்.
எப்படி பயன்படுத்துவது:
கிராம்பு எண்ணெய் அரை டீஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான காட்டனை அதில் ஊற வைத்து, அதை பல் வலி மிகுந்த இடத்தில் வைக்க வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை இதை மாற்றி வைக்கவேண்டும். இதனால் பல் வலி சிறிது குறையும்.
ஆயில் புல்லிங் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பற்கள் பெருமளவு பாதிப்பை சந்திக்காது. வழக்கமான எண்ணெயுடன் கிராம்பு ஆயில் 2 துளி சேர்த்து ஆயில் புல்லிங் செய்து வருவது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கும்.
பல்வலி, சொத்தை பல். பல்லின் வேர்ப்பகுதி வலி போன்றவை இருக்கும் போது கிராம்பு எண்ணெய் உதவும். பல் வலியானது ஈறுகளில் வலி உண்டாகக் கூடும்.
கிராம்பு எண்ணையை மெல்லிய துணியில் நனைத்து ஈறுகளின் மீது தடவி விடவும். இது அதன் வலியை குறைக்கும். கிராம்பு எண்ணெய் இல்லாத பட்சத்தில் கிராம்பை வலி உள்ள பற்களின் மீது வைத்து எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கிராம்பில் உள்ள முக்கிய பொருள் யூஜெனோல். இது கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை மற்றும் துளசி ஆகியவை கலந்த கலவை. இது பல் வலிக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகிறது.
2010 ஆம் ஆண்டு கிராம்பு எண்ணெய் பல் பூச்சிகளை உண்டாகுமாம் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் திறனை கொண்டிருப்பதாக ஆய்வு கூறியுள்ளது. பல் வலிஇருக்கும்போது இந்த கிராம்பு எண்ணையை பயன்படுத்து பல் வலியைக் குறைக்கும். அதே சமயம் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.