Categories
தேசிய செய்திகள்

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்…!!!

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவன் கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் சேர்ந்த தேவேந்திரரா என்பவரின் மனைவி தீப்தி சோனி. இவரை வங்கிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கணவன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும்போது காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகவும், மனைவியை  காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்க்கும்போது காரில் மனைவி இறந்துள்ளார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தார். பிறகு காவல் துறையினரிடம் தான்  இயற்கை உபாதை கழிக்க சென்றிருந்த நேரத்தில் காரில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் நகையை பறித்து சென்று விட்டனர் என்று கூறியுள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த காவல்துறையினர் பல உண்மைகளை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது: தீப்தி சோனியை அவரது கணவர் தேவேந்திரா திட்டமிட்டு கூலி ஆட்களை ஏவி கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மனைவியை கொலை செய்வதற்கு பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலுவுக்கு தேவேந்திரா ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். தீப்தி சோனி உல்லாசமாக வாழ்வதற்கு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்த கணவர், மனைவியை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்து கூலி ஆட்களை ஏவி மனைவியை கொலை செய்துள்ளார்.

Categories

Tech |