பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் பல வருடங்களாக தன் காதலரை தேடிய நிலையில் அவரின் மகன் தன் 75 வயதில் தந்தையை கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்க வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் ராணுவ தளம் அமைத்திருந்தனர். இதில் Wilbert Willey என்ற வீரர் அழகான இளம்பெண் Betty என்பவரை நடன விடுதியில் சந்தித்து இருவரும் காதலித்துள்ளனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனால் தன் காதலர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக Betty காத்திருந்துள்ளார்.
அவர் திரும்பி வராததால் Betty அவர் இறந்துவிட்டதாக கருதி வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். மேலும் இவர்களின் மகன் Bill, leicester இல் வாழ்கிறார். இவரும் தன் தந்தை உயிருடன் இருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார். எனவே அவர் இறந்திருப்பார் என்று நம்பியதால் அவரை தேடவில்லை. அதன் பின்பு அவரின் தாய் இறந்துவிட்டதால் தனக்கு உறவினர்கள் யாரேனும் இருப்பார்களா? என்று டிஎன்ஏ பரிசோதனை மூலமாக தேடியிருக்கிறார்.
அதில் தன் தந்தைக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்க சட்டத்தின்படி கலப்பின திருமணங்கள் செய்வது சட்டவிரோதமாக கருதப்படும். எனவே ஆப்பிரிக்க அமெரிக்கர்கரான வில்பர்ட், பிரிட்டனை சேர்ந்த Betty யை திருமணம் செய்து கொள்ள முடியாது. இதனால் தான் அவர் வரவில்லை என்பதை அறிந்து Bill ஆறுதல் அடைந்துள்ளார்.
தற்போது 75 வயதாகும் Bill தன் தந்தை வழி உறவினர்களை கண்டுபிடித்துள்ளார். எனினும் அவரின் தந்தை மற்றும் அவரின் மகனும் இறந்துவிட்டனர். தன் தந்தை சகோதரரின் இரு மகள்களும் அமெரிக்காவில் வசிப்பதை அறிந்த பின் வீடியோ கால் வாயிலாக அவர்களை சந்தித்து பேசியபோது, Bill தன் 75 வயது வரை ஏக்கத்தில் இருந்ததாகவும் தற்போது தான் நீங்கள் கிடைத்துள்ளீர்கள் என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார். அந்த சகோதரிகள் இருவரும் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்றும் கொரோனா முடிவடைந்த பின்பு உங்களை சந்திக்க வருகிறோம் என்று கூறியுள்ளனர்.