கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கொலை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சில மர்ம நபர்கள் ராமஜெயத்தை கொலை செய்துவிட்டு காரில் தப்பி ஓடிய காட்சி பதிவாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்டத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து கார் வாங்கி பயன்படுத்திய 70-க்கும் மேற்பட்ட கார்களின் உரிமையாளர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 60% உரிமையாளர்களிடம் விசாரணை முடிந்தது குறிப்பிடத்தக்கது.