Categories
உலக செய்திகள்

பல ஆண்டு நட்பு…. ப்ளீஸ்… “அதிபர் புதினுடன் பேசுங்க”…. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த உக்ரைன்..!!

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர், உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து  தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி நகரமாக அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளுக்கு ரஷ்யா தங்களது படைகளையும் அனுப்பி வைத்தது.

இதனால் உக்ரைனின் அரசுப் படைகளின் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் படை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டார்..

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யா. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கையும் தாக்கி வருகிறது ரஷ்யா.. சக்தி வாய்ந்த ஆயுதங்களால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்து இருந்தது.ரஷ்யா இன்று திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உலக அளவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று உக்ரைன் ஆதரவு கேட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர், ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது. உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கையில் தலையிட்டால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |