Categories
தேசிய செய்திகள்

பல உயிர்களை காப்பாற்றிய சுங்கச்சாவடி ஊழியருக்கு…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்….!!!!

மும்பையின் பாந்த்ரா ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஆம்புலன்ஸும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆம்புலன்ஸ் மற்றும் அங்கே இருந்த மற்ற கார்கள் மீது மோதி மீண்டும் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த கோரவிபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 9 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சுங்கச்சாவடி ஊழியர்களில் ஒருவரான சேத்தன் கடம் என்பவர் அதே மேம்பாலத்தில் மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரை விட துணிந்த பலரையும் காப்பாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலரது உயிர்களை காப்பாற்றி இருக்கும் சேத்தன் கடம் தற்போது விபத்தில் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பலரது உயிரை காப்பாற்றி வந்த மும்பையின் ஹீரோவாகவே இருந்து சேத்தன் கடம், தான் இறக்கும் முன்புகூட பிறருக்கு உதவி செய்தது மும்பைவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |