Categories
உலக செய்திகள்

பல கிராமங்களில் தண்ணீர் இல்லை…. வெளியான அதிர்ச்சி தகவலால்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரான்ஸ் முழுவதிலும் வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு  நாட்டில் பல கிராமங்களில் குழாயில் தண்ணீரே வரவில்லை. அதற்குக் காரணம், சில இடங்களில் உள்ளூர் குடிநீர் வழங்கல் மையத்தில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்திற்கு சென்றுவிட்டதால், அதைக் குடிப்பது பாதுகாப்பானதல்ல என்று கருதி அதிகாரிகளே தண்ணீர் விநியோகத்தை நிறுத்திவிட்டார்கள்.  ஏற்கனவே பிரான்ஸ் முழுமைக்கும் வெவ்வேறு மட்டத்தில் வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூர் அதிகாரிகளும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள். சில இடங்களில் ரேஷன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கோர்சிக்காவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலை நீடிக்குமானால், 25 நாட்களுக்குப் பிறகு சுத்தமாக பயன்பாட்டுக்கு தண்ணீரே இருக்காது என்று கூறியுள்ள அதிகாரிகள் கடுமையான பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இதுவரைக்கும் இல்லாத  பிரான்ஸ் வறண்ட ஜூலை மாதத்தைக் கண்டுள்ள நிலையில், கோடையில் ஏற்கனவே மூன்று வெப்ப அலைகள் உருவாகிவிட்டன. மேலும் பருவநிலை பிரச்சினைகள் மோசமடையுமானால், அடிக்கடி வெப்ப அலைகளையும் வறட்சிகளையும் பிரான்ஸ் சந்திக்கவேண்டியிருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Categories

Tech |