Categories
உலக செய்திகள்

பல கிலோமீட்டர் தூரம் கைவிலங்கு அணிந்து நீச்சல்… கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கா வீரர்…!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கை விலங்கு அணிந்து நெடுந்தூரம் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பென்  காட்ஸ்மேன் என்பவர்  கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக ரொம்ப தூரம் நீந்தி உள்ளார். அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் கிங் ஜார்ஜ்  ஒய். எம் .சி.ஏவில் உள்ள குளத்தை 344 முறை அதாவது சுமார் 8.6 கிலோ மீட்டர் நீளத்தை கைவிலங்கு அணிந்து நீந்தி உள்ளார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீந்தி உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஈரானை சேர்ந்த 40 வயதான எல்ஹாம் சதாத்  அஸ்காரி 2019 ஆம் ஆண்டு 3.41 மைல் தூரம் கைவிலங்கு அணிந்து நீந்தி உலக சாதனை படைத்தார்.

தற்போது அதை பென்  காட்ஸ்மேன் முறியடித்துள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் பென்  காட்ஸ்மேன் ,அவர் தனது மூன்று வயதிலிருந்தே நீச்சல் செய்து வருகிறாராம். கைவிலங்கு அணிந்து இவ்வளவு தூரம் நீந்தி கின்னஸ் சாதனையை முறியடித்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், இதை போன்று பல தனிப்பட்ட சாதனைகளையும் அவர் முறியடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |