பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் பிரபல ரவுடியாக இருக்கின்றார். இவர் சென்ற 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் செல்லதுரை என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருக்கின்றது. கருவாட்டு பாலம் அருகே உதுமன் அலி என்பவரை வழிமறித்து 900 ரூபாயை பறித்துச் சென்றார்.
மேலும் தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து இரண்டு பவுன் நகை, மோதிரம், செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற இவர் மீது இப்படி பல வழக்குகள் இருக்கின்றது. இவர் இது போல தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு அன்னதானப்பட்டி போலீஸ்சார் பரிந்துரையின் பெயரை போலீஸ் கமிஷனர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பெயரில் சூரியமூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.