விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் தயாரித்துள்ளார்.
கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனையடுத்து தற்போது படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் கோப்ரா ரிலீஸ் ஆகும்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. அதில் விக்ரம் பல கெட்டப்புகளில் மிரட்டி இருக்கின்றார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் ட்ரெய்லரே வே8ற லெவலில் இருப்பதால் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆக இருக்கும் என கூறி வருகின்றார்கள்.