Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!

வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வேலூர் மாவட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர் சங்கம், அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க மாவட்ட பொது செயலாளர் எஸ். ஏ. சிம்புதேவன் தலைமை தாங்கிய இந்தப் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கே.லோகேஷ் குமார் முன்னிலை வகித்துள்ளார். மேலும் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். தேவதாஸ், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் ஏ. எஸ். சங்கர், ஆட்டோ தொழிலாளர்கள் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். வாகன தகுதி சான்றிதழ், வாகன புதுப்பிப்பு சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றிற்கு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற  வேண்டும். யாரோ ஒருவர் குற்ற செயலில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களையும் குற்றவாளியாக பார்ப்பதை கைவிட வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள்.

Categories

Tech |