Categories
பல்சுவை

பல தலைவர்களை வாதாடி காப்பாற்றிய இரும்பு மனிதர்….. இந்தியாவுல இப்படியும் ஒரு வக்கீல் இருந்தாரா?….!!!!

1909ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தலைவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் இருந்து அவர்களை காப்பாற்றிய இந்தியாவை சேர்ந்த ஒரு வக்கீல். அது யார் என்றால் சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் என்பவரை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள  கரம்சாத் ஊரில், ஜாவர்பாய் படேல் – லட்பாய் தம்பதியினருக்கு 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் நாள் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.  இவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். இவர் தனது 16 வயதில் ஜாவெர்பென் படேல்  என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை இருந்தது.

இவருக்கு சிறு வயது முதலே வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படி இவர் படித்து வழக்கறிஞராக மாறினார். பின்னர் காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட இவர் அவருடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்று உள்ளார். அப்படித்தான் 1909ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் உள்ள தலைவர்கள் அனைவரையும் தூக்கிலிட முற்பட்டபோது அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து போராடியவர் சர்தார் வல்லபாய் பட்டேல். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தூக்கிலிட பட்டியலிட்ட தலைவர்களில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றிருந்தன. இதை தெரிந்து கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வாதாடி வருகிறார். அப்படி ஒருநாள் வாதாடி கொண்டிருந்தபோது அவருடைய ஜூனியர் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதை பார்த்ததும் சர்தார் வல்லபாய் பட்டேல் கண் கலங்கி நிற்கின்றார்.

இதை பார்த்த நீதிபதி என்ன நடந்தது என்று கேட்கும்போது தனது மனைவி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கின்றார். அவர் அப்படிக் கூறியதும் நீதிமன்றம் அலுவலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இருப்பினும் சர்தார் வல்லபாய் பட்டேல் தனது மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால் எனது மனைவி இறந்து விட்டாள் இனி அவர் திரும்ப வரப்போவது இல்லை. ஆனால் நான் தற்போது இங்கிருந்து சென்று விட்டால் பல தலைவர்களின் உயிர் போவதற்கு நான் காரணமாகி விடுவேன் என்று கூறி தொடர்ந்து போராடினார். அவரது முயற்சியால் அந்த வழக்கில் அவர் வெற்றியும் அடைகின்றனர். அதனால்தான் அவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கின்றோம்.

Categories

Tech |