சிறை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இறந்துவிட்டதாக தனக்குத்தானே இறப்புச் சான்றிதழ் தயார் செய்த குற்றவாளி சிக்கிக் கொண்டார்.
அமெரிக்கா நியூயார்க் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம் நபர், ட்ரக் திருட்டு போன்ற பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளார். பின்னர் நான்கு ஆண்டுகளாக தண்டனை அனுபவித்திருந்த நிலையில் ட்ரக் திருட்டின் தொடர்பில் மீண்டும் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இந்நிலையில் தனக்கு மீண்டும் சிறை தண்டனை கிடைக்கப் போவதாக எண்ணி இளைஞர் தான் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழை தயார் படுத்தி தன் வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றார். பல்வேறு விஷயங்களையும் சரி பார்த்து இறப்புச் சான்றிதழை தயார் செய்தவர் ஒரு வார்த்தை பிழையால் சிக்கிக்கொண்டார்.
அச்சான்றிதழில் Registry என அச்சிடுவதற்கு பதிலாக Regsitry என அச்சடித்துள்ளார். இறப்புச் சான்றிதழை பரிசோதனை செய்த நீதிமன்றம் எழுத்துப்பிழை ஏற்பட்ட காரணத்தால் சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டது. அவ்விசாரணையில் எழுத்து வடிவம் முழுவதுமாக மாறி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலமாக போலிச் சான்றிதழ் என நீதிமன்றம் கண்டறிந்தது. இத்தகைய காரணத்தால் சிக்கிக் கொண்ட குற்றவாளி மீண்டும் சிறையில் அடைத்து தண்டிக்கப்பட்டுள்ளார்.