நமது நாட்டிற்கும் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர் நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலை எழுதிய ஒரு அற்புதக் கவிஞர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்லாமல் இசை, பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால் தடம் பதித்த அற்புதமான மாமனிதர் அவர். மேலும் கவிதைக்காக நோபல் பரிசு வாங்கியவர் ரவீந்திரநாத் தாகூர். பாரம்பரிய கல்வி முறையில் நாட்டம் இல்லாத தாகூர் அவர்கள் ஆசிரியர்களை வரவழைத்து வீட்டிலேயே கல்வி கற்க தொடங்கியுள்ளார்.
அதன் பின் 14ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1878 ஆம் வருடம் தந்தையுடன் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் மூலமாக ரவீந்திரநாத் தாகூர் பல நிகழ்வுகளை தெரிந்து கொண்டுள்ளார். வானியல், அறிவியல், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்ற இவர் கவிதை மேல் இருந்த பற்றின் காரணமாக தனது 8 வயதில் கவிதை எழுத ஆரம்பித்துள்ளார். தனது கவிதைகளை பானு சிங்கம் எனும் பெயரில் 1877 வருடம் வெளியிட்டார்.
1909 ஆம் வருடம் கீதாஞ்சலியை எழுத தொடங்கியுள்ளார். லண்டன் சென்றபோது கீதாஞ்சலியில் உள்ள பாடல்கள் மற்றும் கவிதைகளை 1912 ஆம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் லண்டனில் கீதாஞ்சலி அதிக வரவேற்பு பெற்றதால் அங்கு உள்ள இந்திய சமூகத்தில் வரையறுக்கப்பட்ட பதிப்பில் வெளியானது. அதற்கு ரவீந்திரநாத் தாகூர் முன்னுரை எழுதியுள்ளார் மேலும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலிக்கு 1913 ஆம் வருடம் இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது அதன் பின் வங்காளத்தில் எழுதிய கவிதைகள் மற்றும் நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இவர் இலக்கியத்திற்காக முதல் நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் ஆவார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 1940 ஆம் வருடம் இலக்கிய முனைவர் பட்டம் வழங்கியது. அவர் எழுதிய ஜன கண மன பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கிறது. மேலும் குழந்தை திருமணம், தீண்டாமை போன்றவற்றை ஒழிப்பதற்காக கவிதை எழுதியுள்ளார். ஆங்கில அரசின் சார்பில் இவருக்கு 1915 ஆம் வருடம் சார் பட்டமும் வழங்கப்பட்டிருந்தது. 1919 ஆம் வருடம் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை அறிந்து ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலேயர் அரசின் அந்த சார் பட்டத்தை திருப்பி கொடுத்துள்ளார்.