கடந்த ஒரு வாரத்தில் நாடுகளிலிருந்து உபகரணங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது. இவற்றை உரிய முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன.
இதை தொடர்ந்து பல நிறுவனங்களும், நாடுகளும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து, உருமேனியா, ரஷ்யா, துபாய், அமெரிக்கா, குவைத், பிரான்ஸ், தாய்லாந்து, ஜெர்மனி, உஸ்பெகிஸ்தான், பெல்ஜியம், இத்தாலி நாடுகளிலிருந்து பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளதாகவும் அவை உரிய முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.