Categories
தேசிய செய்திகள்

பல நாடுகளில் தடுப்பூசி இலவசம்…. இந்தியாவில் 6 மடங்கு விலை அதிகம் – தமிழக காங்கிரஸ் விமர்சனம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு நாளைக்கு 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போட மூன்று ஆண்டுகள் ஆகிவிடும் என்று தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பல நாடுகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகையில் தனியாருக்கு உதவும் நோக்கில் இந்தியாவில் தடுப்புசியின் விலை ஆறு மடங்கு அதிகரித்து வினியோகிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |