Categories
உலக செய்திகள்

பல நிகழ்ச்சியில் பங்கேற்றேன்… தொற்றியது கொரோனா… நேபாள சுற்றுலாத்துறை மந்திரி…!!?

நேபாள சுற்றுலாத் துறை மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேபாள சுற்றுலா துறை மந்திரி யோகேஷ் பத்தராய் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடு நேபாளம் என்று அவர் கூறியிருந்தார்.இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வாரம் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் பல நிகழ்ச்சிகளில் நான் வெளியே சென்று கலந்து கொண்டேன். அப்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மீண்டும் பரிசோதனை செய்ததில் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் கடந்த ஒரு வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |