Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… துத்தி இலையின் அற்புத நன்மைகள்…!!!

பல நோய்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் துத்தி இலையை உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

பல நோய்களுக்கு தீர்வாக அமையும் துத்தி இலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். துத்தி இலை,பூ, விதை, வேர் மற்றும் பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, மூலம், பவுத்திரம் மற்றும் ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். துத்தி இலைச் சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.

Categories

Tech |