Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… எந்த நோயும் அண்டாது… முட்டைகோஸின் அக மருத்துவம்…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். ஆனால் சிலர் காய்கறிகளை விரும்புவதில்லை. சில காய்களை மட்டும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் முட்டைக்கோஸ்.

இதில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய சருமம் ஆரோக்கியம் அடைந்து பொலிவுடன் மாறும். உங்களின் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவும். கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதே உடல் எடை அதிகமாவதற்கு முக்கிய காரணம். முட்டைக்கோஸ் ஜூஸில் குறைவான கலோரி உள்ளதால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராது. இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் எளிதில் உடல் எடை குறையும்.

அல்சர் உள்ளவர்கள் முட்டைக்கோஸ் தண்ணீர் பருகி வந்தால் விரைவில் குணமடையும். முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் சருமம் பளபளப்பாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினை தீர இது மிகவும் உதவுகிறது. புற்று நோயை குணப்படுத்துகிறது. தோல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இது அருமருந்தாக பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது பயன்படுகிறது. எனவே முட்டைக்கோசை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் உடம்பில் அண்டாது.

Categories

Tech |