Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… தினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுங்க… எந்த நோயும் அண்டாது…!!!

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உலக நாடுகள் பல வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். அதில் புரத சத்துக்கள், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது நமது உடலுக்கு ஊட்டச்சத்து தருகிறது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் அதன் பலன் மிகவும் அதிகம். அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அபார வெங்காயத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வீசும் என பலர் நினைப்பார்கள். ஆனால் அவ்வாறு நினைத்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்காது. வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு புதினா இலைகளை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் வீசாது. நெஞ்சு வலி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் உறையும் பிரச்சனை சரியாகும். இதன் ஒரு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் வெங்காயச் சாற்றினை அரை ஸ்பூன் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம்பெறும். அவ்வாறு வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இருமல், ரத்த வாந்தி, ஜலதோஷம் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் நீங்கும். நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும். ஜலதோஷம், இருமல், காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளை குணமாக்க வெங்காயச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம்.

காலரா நோயை குணமாக்க 5 சின்ன வெங்காயம் மற்றும் 10 மிளகு ஆகியவற்றை நன்றாக இடித்து அதனுடன் நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிடலாம். ரத்த மூலம் போன்ற கடுமையான மூல நோய்களுக்கு வெங்காயத்தை சாறு எடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.

பல் வலி உள்ளவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி விரைவில் குணமாகும். மேலும் இரவு தூங்கும்போது வைத்துக்கொண்டு படுத்தால் இடைஞ்சல் இல்லாமல் நீண்ட நேரம் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும். தொடர்ந்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் இதனை வைத்து வந்தால் சொத்தைப் பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் வெளியேறி.

Categories

Tech |