Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… இந்த ஒரு பழம் போதும்… எந்த நோயுமே அண்டாது…!!!

உடலில் உள்ள பல வித நோய்களுக்கு அருமருந்தாக அமையும் எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி எலுமிச்சை பழத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும். எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் நீங்கும். இது மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும். உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாறுடன் சர்க்கரைக்கு பதில் உப்பு சேர்த்து அருந்தலாம்.

மேலும் இது நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. வயிற்று வலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல் மற்றும் கண் வலி ஆகியவற்றை சரிசெய்ய இதன் சாறு உதவுகிறது. இது பித்தத்தைப் போக்கும். தேள் கடிக்கு உதவும். மஞ்சள் காமாலை, வயிற்றுப்புண், காலரா கிருமிகளை ஒழிக்க இது உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறு குடித்தால் அஜீரணம் பிரச்சனை நீங்கும். இதுபோன்ற பல மருத்துவ குணங்கள் நிறைந்த எலுமிச்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

Categories

Tech |