உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் ஆலம் பழத்தை நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இதுவே தீர்வாக அமையும்.
அவ்வாறு ஆலம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுக்கள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது. ஆலம்பழம் தசை வலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது. பல் வலி ஏற்படும் நேரத்தில், ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி தீரும். மேலும் சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது.