விஜே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வந்தவுடன் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
விஜே பார்வதி பிரபலமான பத்திரிகை நிருபர் ஆவார். இவர் யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றி மக்களுடன் உரையாடி மிக பிரபலம் ஆனார். இதனையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவது போன்ற செயல்களால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி தன்னை பல தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க அழைப்பதாகவும், அதே சமயம் தன்னிடம் அத்துமீறி நடக்க முயல்வதாகவும், அதனால் அந்த பட வாய்ப்பை தவிர்க்க வேண்டிய சூழலில் தள்ளப் படுவதாகவும் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். மேலும், தனக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் இந்த காரணத்தினால் தான் இழந்து விட்டதாகவும் கூறினார். இதனிடையே, தனக்கென்று நடிப்பதற்கு ஒரு படம் கூட இல்லை என்பதை வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக தயாரிப்பாளர்கள் மீது இவர் குறை கூறுவதாக பேசப்படுகிறது.