Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

பல பிரதமர்களை பார்த்திருக்கேன்…. இவரை போல கொடூரமானவர்களை பார்க்கல – மம்தா ஆவேசம்…!!!

மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா, 7 முறை நான் எம்பியாக பதவி வகித்துள்ளேன், பல பிரதமர்களை கண்டுள்ளேன். ஆனால் மோடி போன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை நான் கண்டதில்லை என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |