புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசிய போது ஒரு மாநில முதலமைச்சர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள் மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை பார்த்ததில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என சொல்லி அதை தற்போது அமைத்துக் காட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் புதுமைப்பெண் திட்டம் உட்பட கல்வித்துறையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் இந்தியாவிற்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம் திறமை இருந்தும் வறுமையின் காரணமாக மாணவியர்கள் படிப்பை கைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம் இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த ஐந்து வருடங்களில் அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும் டெல்லி தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறி ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.