Categories
சினிமா தமிழ் சினிமா

“பல புறக்கணிப்புகளுக்கு பிறகு எழுந்து வந்திருக்கிறார்” எங்களுக்கு அவர்தான் உதாரணம்….. படவிழாவில் பிரசன்னா நெகிழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது சினம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நினைத்தாலே இனிக்கும், வாகா, ஹரிதாஸ், யுவன் யுவதி திரைப்படங்களை இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் பிரசன்னா கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, பல புறக்கணிப்புகளுக்கு பிறகு அருண் விஜய் தற்போது எழுந்து வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அருண் விஜய் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவர் என்னுடைய குடும்ப நண்பர். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார். இதனையடுத்து இயக்குனர் ஜிஎன்ஆர் குமாரவேலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும் நான் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி என்றார்.

இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் உடனே ஓகே சொன்னார். இப்படத்தில் விஜயகுமார் சார் உடன் பணி புரிவது முதலில் எனக்கு பயமாக இருந்தது. அதன்பின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளராக நடிகரே அமைந்தது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் நாங்கள் நம்பிக்கை இழந்து இருந்த சமயத்தில் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஓடிடியில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட வேண்டும் என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக அனைவராலும் பேசக்கூடிய படமாக அமையும் என்று கூறினார்.

Categories

Tech |