Categories
மாநில செய்திகள்

பல பெண்களுடன் அரைநிர்வாண வீடியோ…. தட்டிக்கேட்ட மனைவியின் கதையை முடித்த கொடூரம்….!!!!

சென்னை, புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான முதலே கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தகராறு பெரிய அளவில் வெடிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஹேமாவதி தன்னுடைய கணவனின் செல்போனை எடுத்து பார்க்கும் பொழுது பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த பல பெண்களுடன் வீடியோ காலில் பேசும்போது அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்வது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் ஹேமாவதி வழுக்கி விழுந்து மூச்சு பேச்சில்லாமல் இருப்பதாக ஹேமாவதியின் அண்ணனுக்கு தொலைபேசி மூலம் வினோத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் கேட்டு வீட்டிற்கு வந்த ஹேமாவதியின் அண்ணன் மயங்கி கிடந்த ஹேமாவை மருத்துவமனையில் அனுமதித்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஹேமாவதியின் அண்ணன் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். தனது தங்கையின் கணவரை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு உண்மை என்ன? என்பது தெரிய வரும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |