மலையாளம் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக விநாயகன் இருந்து வருகிறார். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, கேரளாவில் மீ டூ தொடர்பாக பலரும் பேசி வருகின்றனர். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவுவைத்து கொள்வது தான் மீ டூ வா? என்றும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும்போது எனக்கு பிடித்திருந்தால், நான் நேரடியாக அவரிடம் சென்று என்னுடன் உறவுகொள்ள விருப்பமா..? என்று கேட்பேன்.அவ்வாறு விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவுவைத்து கொள்வேன். இப்படி நான் பல பேரிடம் உறவு வைத்துள்ளேன் என்று கூறினார். இதனால் விநாயகனின் இந்த பேட்டிக்கு பல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் வருடம் பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக விநாயகனை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories