Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பல பேருக்கு விக்னேஷ் சிவன் பற்றிய தெரியாத செய்தி”…. என்ன தெரியுமா…????

விக்னேஷ் சிவன் நடித்த முதல் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இவர் கடந்த 2012ஆம் வருடம் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் தந்தார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் வெற்றியை தரவில்லை என்றாலும் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இணைந்து நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சென்ற 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நடித்த சிவி திரைப்படம் பற்றி பேசப்படுகின்றது. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பாகவே சென்ற 2007ஆம் வருடம் வெளியான சிவி திரைப்படத்தில் நடித்துள்ளார். இது தற்போதுதான் பலருக்கும் தெரியவந்திருக்கின்றது. இவர் வேலையில்லா திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் பல திரைப்படங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |