Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய காளை”…. வாகனம் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்ட காளை வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் காளாப்பூர் ஊராட்சியில் கட்டப்புளி கருப்பர் கோவில் உள்ள நிலையில் இந்த கோவில் காளை சண்டியரானது பல ஊர்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் காளாப்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவில் கோவில் காளை சண்டியர் சென்று கொண்டிருந்த போது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதி மக்கள் காளையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து காளையை காளாப்பூர் கட்ட புளி கோவில் முன்பாக இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் காளைக்கு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Categories

Tech |