உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து குடிநீர் கட்டணத்தை பல மடங்குகளாக உயர்த்தியுள்ளனர். அதன்படி ஒரு ஆண்டில் வீடுகளுக்கான குடிநீர் கட்டணம் 600 ரூபாயாக இருந்ததை 2,820 ரூபாயாகவும், வணிக நிறுவனங்களுக்கான குடிநீர் கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 8,460 ரூபாயாக அதிகரித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு தேனி தாலுகா செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, நாகராஜ் உள்பட பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுபியுள்ளனர்.