அமெரிக்காவின் பிரபலமான டிஸ்னிலாண்ட் தீம்பார்க் தற்போது திறக்கப்படபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் அமைந்துள்ளது. இதன் 65 வருட வரலாற்றில் முதன் முதலில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக அதன் வாயில்கள் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த தீம் பார்க்கானது கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 12 ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நிலையில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் இன்று வரை மூடிய நிலையில் தான் உள்ளது. இதனால் தற்போது இந்த தீம் பார்க் ஒரு முக்கிய காரணத்திற்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் இந்த வாரம் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி அளிக்கக்கூடிய தளமாக மாறவுள்ளது. இதனை ஆரஞ்ச் கவுண்டி அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் இதுவரை 23 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3, 80,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, அதிக மக்கள்தொகை கொண்டுள்ளதால் தடுப்பூசி விகிதத்தில் பின்தங்கி காணப்படுகிறது. இதனால் தற்போது டிஸ்னிலேண்ட் வெகுவான மக்கள் தடுப்பூசி போடும் தளமாக திறக்கப்படவுள்ளது. மேலும் இதில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.