Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பல மாதங்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகர்… ‘டீ’க்கடையில் நண்பர்களுடன் அரட்டை…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்த பிரபல நடிகர் மம்முட்டி பல மாதங்களுக்கு பின் வெளியே வந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதை கடைபிடித்த பிரபல மலையாள நடிகர் மம்முட்டி பல மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார் . தற்போது 275 நாட்களுக்குப் பின் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் ‌. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த நடிகர் மம்முட்டி நேரடியாக மெரைன் டிரைவ் சென்றுள்ளார்.

அவருடன் காரில் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா மற்றும் நடிகர் ரமேஷ் பிஷராடி ஆகியோரும் சென்றுள்ளனர். பின்னர் நடிகர் மம்முட்டி டீக்கடை ஒன்றில் அவருடன் வந்த நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடித்தபடி டீ குடித்துள்ளார் . தற்போது அவர் கார் பயணத்தில் எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |