தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில் விருதாச்சலத்தில் போட்டியிடும் பிரேமலதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து திருச்செங்கோட்டில் போட்டியிடும் ஈஸ்வரனின் வேட்பு மனு தாக்கல் செய்தார். கடலூரில் போட்டியிடும் எஸ்சி சம்பத் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேப்பனஹள்ளி பகுதியில் போட்டியிடும் கேபி முனுசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது.