Categories
உலக செய்திகள்

பல மைல் தூரம் கடந்து சென்று… திரும்பிய பந்தய புறாவிற்கு… தண்டனையா…??

பந்தைய புறா ஒன்று பல மைல் தூரம் கடந்து சென்று திருப்பிய நிலையில் அதிகாரிகள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவில் புறா பந்தயம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் ஜோ என்ற பெயருடைய பந்தய புறா ஒன்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியில் அமெரிக்காவின் oregon என்ற இடத்திலிருந்து புறப்பட்டுள்ளது. அதன்பின்பு அந்த புறா மாயமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் என்ற இடத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் அந்த புறா சோர்வாக இருந்துள்ளது. மேலும் அந்த புறா பசிபிக் மகா சமுத்திரத்தில் ஒரு சரக்கு கப்பலின் மீது அமர்ந்து கடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் Kevin Celli-Bird என்பவர்தான் இந்தப் புறாவை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடித்துள்ளார். அதன்பின்பு அதற்கு உணவளித்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் உள்ளூர் ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரிகள் அந்த புறாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு Kevinற்க்கு  உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த புறா அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ளதால் இதற்கு கொரோனா ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகமடைவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அந்த புறாவை பிடித்து கொல்லுவதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த புறா தன் சக்தியை பயன்படுத்தி மீண்டும் பறந்து சென்றுவிட்டது. எனவே அதனை திரும்பப் பிடிக்க இயலாது என்று Kevin கூறியுள்ளார். எனினும் ஆஸ்திரேலியாவின் வனத்துறை அதிகாரிகள் அந்த புறாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |