2022 பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல்முறையாக நடைபெற உள்ள பிபா உலக கோப்பை என்பதால் இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருகிறது. இந்த தொடரை எதிர்பார்த்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கால்பந்து உலகக்கோப்பை பிரபலப்படுத்தும் நோக்கிலும் அது குறித்த விளம்பரங்களை கத்தார் அரசு பிபா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆனந்த் மகேந்திரா தனது twitter பக்கத்தில் 2022 பிபா கால்பந்து உலகக்கோப்பை குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், சிறுவர், சிறுமிகள் உண்மையான கால்பந்து போட்டியில் அரங்கேறும் காட்சிகளை தத்துருவமாக செய்கின்றனர். அத்துடன் கத்தார் மற்றும் பிபா ஆகியவை உலகக் கோப்பைக்கான விளம்பரங்களுக்காக பல லட்சங்களை செலவழிப்பார்கள். ஆனால் குறைந்த செலவில் மகிழ்ச்சி போங்க எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ மக்களிடம் ஏற்படுத்தும் உற்சாகத்தை அந்த விளம்பரங்களால் கொடுக்க முடியாது என்று பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
FIFA & Qatar will end up spending millions on promotional videos/advertising for the World Cup. I don’t think any of that will infect people with excitement as much as this cheap & cheerful video that authentically communicates what Football means to the world… pic.twitter.com/hFhL1nzv84
— anand mahindra (@anandmahindra) September 29, 2022