Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த நபர்…. தகராறில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

பணமோசடி செய்த நபரின் மனைவியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திடீர்குப்பம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  சீட்டு நடத்துவதாக கூறி  அதே பகுதியில்  வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து   பல லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இந்நிலையில் ராஜா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ராஜாவின் மனைவியிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்  சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ராஜாவின் மனைவியிடம் பணத்தை உடனடியாக தரும்படி கேட்டு தகராறு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |