Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து 14 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் அபிபுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹாஜிரா என்ற மனைவி உள்ளார். இவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் மாலதி என்பவர் 48 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறினார். அந்த வீட்டை வாங்குவதற்காக ஒப்பந்தம் போட்டு 24 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தியுள்ளேன். இதனை அடுத்து வீட்டு பத்திரத்தை திருப்பூரில் இருக்கும் ஒரு வங்கியில் அடமானம் வைத்து 38 லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்த காசோலையை மாலதியிடம் கொடுத்தேன்.

அப்போது முன்பணம் போக எனக்கு தர வேண்டிய 14 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக மாலதி உறுதியளித்தார். அதன் பின் 2 தவணைகளாக 14 லட்சத்திற்கான காசோலையை மாலதி என்னிடம் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பிவிட்டது. எனவே மோசடி செய்த மாலதி மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹாஜிரா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |