சட்ட விரோதமாக லாரியில் கடத்தி வந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்த கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஊதுபத்தி பார்சல்களுக்கு இடையே இருந்த மூட்டைகளில் குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்த கோபால் என்பதும், உடனிருந்தவர்கள் மஞ்சுநாத் மற்றும் கிரீஸ் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து 10 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 24 மூட்டைகளில் இருந்த குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபால் உள்பட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.