Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி” பாதிக்கப்பட்டவர்களின் புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

பண மோசடி செய்த 2 பேருக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் மதியழகன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், தர்மபுரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அம்மன் அக்ரோ பார்ம்ஸ், அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ்  என்ற பெயரில் நாட்டு கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் என 3  ஆண்டுகள் வழங்கப்படும் எனவும், முதலீடு செய்தவர்களுக்கு 150 நாட்டுக்கோழி குஞ்சுகளும் , தீவனம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதனை நம்பி பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 87 பேர் 98 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் மதியழகன், லட்சுமி ஆகிய 2 பேரும் சேர்ந்து பணத்தை மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதியழகன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி  மோசடி செய்த மதியழகன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய 2 பேருக்கும்  10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |