போலி அரசு அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே ஓரசாலை கிராமத்தில் மனோ, சிவராம் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் டாண்பாஸ்கோ நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்றுக் கொண்டிருந்தனர். இவர்களிடம் மனோ மற்றும் சிவராம் அரசு அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து பணம் தரும்படி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மனோ மற்றும் சிவராம் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனோ மற்றும் சிவராம் ஆகிய 2 பேரும் இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனோ மற்றும் சிவராம் மீது கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. இவர்கள் 2 பேரும் 30 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா 50 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளனர். இதனையடுத்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் 1,50,000 பணம் மோசடி செய்துள்ளதாக மனோ மற்றும் சிவராம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் புகார் அளிக்க வந்தவர்களிடம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.