திருச்சியில் வேலை வாய்ப்பு உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் 5 வருடத்திற்கு மேல் வெள்ளை இல்லாமல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். அவரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவி தொகை பெறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைகளுக்கு எவ்வித தடையும் இருக்காது என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் கூறியுள்ளது.