Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்று திரைப்படம்”…. மணிரத்னத்தை புகழ்ந்து தள்ளிய பிரம்மாண்ட இயக்குனர்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினத்தை பாராட்டி சங்கர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இத்திரைப்படம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினத்தை பாராட்டி சங்கர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “பொன்னியின் செல்வன் 1 கவருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்று திரைப்படம். # மணிரத்னம் சார் ஃப்லிம் மேக்கிங்கில் கிங் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கின்றது. ஹெட்ஸ் ஆப் ரவிவர்மா சித்திரமான சித்தரிப்பு. முழு மூன்று மணி நேர சூழ்ச்சிகள் அடுத்த பாகத்திற்கு உங்களை ஈர்க்கின்றது. இந்த காவியத்தை உருவாக்கிய பரந்த ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |