Categories
லைப் ஸ்டைல்

பல விதமான பிரச்சனைகள்… ஒரே பழத்தில் தீர்வு… அருமருந்தாகும் அற்புத கனி…!!!

உடலிலுள்ள பலவித பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் எலுமிச்சை கனியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்.

எலுமிச்சை கனி ஒரு அதிசய கனி. எல்லா காலங்களிலும் இது கிடைக்கும். இராசக்கனி என்று பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கி சீரான சுவாசம் தருகிறது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உள்ளவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சை சாறு அருந்தலாம்.

வயிற்று வலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல் மற்றும் கண் வலி ஆகியவற்றை சரியாகும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி மற்றும் பொட்டாசியமும் இதில் உள்ளது. எலுமிச்சை உடல் எடையை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலுக்குள் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவை நிறுத்துவது. மூட்டுகளை வலுப்படுத்தும். அஜீரணம் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். பொடுகை நீக்கி தலைமுடிக்கு பளபளப்பு அளிக்கிறது. முக சுருக்கங்கள் மற்றும் சளி மற்றும் காய்ச்சலை தடுக்க உதவுகிறது.

Categories

Tech |