சரக்கு லாரி பள்ளத்தில் இறங்கி விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பிவிட்டார்.
கேரள மாநிலத்திலிருந்து கூடலூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தேவர்சோலை 9-வது மைல் பகுதியில் சென்ற போது சரக்கு லாரி ஓட்டுநர் டீ குடிப்பதற்காக வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வாகனத்தின் உதவியுடன் பள்ளத்தில் இறங்கிய லாரியை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.